"புதுச்சேரியில் திமுக - காங். கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது"- கிரிஷ் சோடங்கர்
Mar 19, 2026, 21:45 IST1773936921000
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை விமான நிலையத்தில் செய்தி அவர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராகுல்காந்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் சுற்றுப்பயணம் செய்வார், அனைத்து தலைவர்களும் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்வார்கள். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரியில் எந்த சிக்கலும் இல்லை. எல்லாம் சுமுகமாகவும் சரியாகவும் நடக்கும். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நேர்காணல் விரைவில் தொடங்கும்” என்றார்.

