இது மோடி 3.0 இல்லை மோடி 2.1- ப.சிதம்பரம் விமர்சனம்

 
chidambaram

பிரதமர் மோடி மணிப்பூர் செல்வது எப்போது? என காங்கிரஸ் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

People want to know why 'achhe din' hasn't arrived after 6 years:  Chidambaram - The Week.


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில்,  “பிரதமர் மோடி நாளை முதல் வரும் 14 ஆம் தேதி வரை ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக  இத்தாலி என பல இடங்களுக்கு செல்லவுள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். இவை எல்லாம் நல்லதுதான், ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்? மோடி அரசின் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. சிலருக்கு பழையே இலாகாக்களும், சிலருக்குப் புதிய இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மோடி 3.0 என்று சிலர் வர்ணிக்கிறார்கள், ஆனால் இது மோடி 2.1 போன்று தெரிகிறது” என விமர்சித்துள்ளார்.