காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடமாற்றம்: காங்கிரஸ் கண்டனம்!

 
1

நாடாளுமன்ற வளாகத்துக்குள் அமைந்திருந்த மகாத்மா காந்தி சிலை உள்பட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், மகாராஷ்டிர வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால், சிவாஜி மற்றும் அம்பேத்கர் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதால், மகாத்மா காந்தி சிலையும் அது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தின் முகப்புப் பக்கத்தில் இருந்த சிவாஜி, காந்தி, அம்பேத்கர் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது அராஜக நடவடிக்கை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.