காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு..!!
Mar 5, 2026, 10:00 IST1772685047453
37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.அதில் 28 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு உறுப்பினருக்கான வேட்பாளராக தற்போது கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

