விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.

 
Tharagai
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் விஜயதாரணி.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி.
பாஜகவில் இணைந்த விஜயதாரணி உடனடியாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக.
இந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் என்பவர் வேட்பாளராக போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.