சவுக்கு சங்கரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
![வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்... 4 வழக்குகளிலும் ஜாமீன்..](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ec2a71fbd2315e6ad9400d82d57fa0b1.jpg)
பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேசிய யூடியூபர் சவுக்கு சங்கரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி தேனியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரையடுத்து சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேசிய யூடியூபர் சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி திருமதி. எம். ஹசீனா சையத் தலைமையில் நாளை (9.5.2024) வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.