குவியும் வாழ்த்துக்கள்...பிரேம்ஜி -இந்து ஜோடியின் முதல் புகைப்படம்..!

 
1

முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொண்டு கோலிவுட்டில் நீண்ட காலங்களாக சிங்கிளாகவே திரிந்து வந்த பிரேம்ஜி, தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார். நாளைய தினம் பிரேம்ஜியின் திருமணம் இந்து என்பவருடன் நடக்க உள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சூழ இந்த திருமணம் நாளை காலை நடக்க உள்ளது. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இயக்குனரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த திருமணம் மிகவும் எளிமையாக நெருங்கிய சொந்தங்கள் சூழ நடக்க உள்ளதாகவும் விரைவில் நடக்க உள்ள ரிசப்ஷனில் சந்திப்போம் என்றும் அவர் கூறியிருந்தார். நாளைய தினம் திருத்தணி முருகர் கோயிலில் நடக்க உள்ள திருமண ஏற்பாடுகளை இன்று காலை நடிகர் வெங்கட் பிரபு பார்வையிட்டிருந்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது பிரேம்ஜி மற்றும் இந்து திருமண கோலத்தில் காணப்படும் புகைப்படத்தை நடிகர் வைபவ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு திருமண களை வந்துள்ளதாக தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் பட்டு வேட்டி சட்டையில் பிரேம்ஜி காணப்படுகிறார். இந்துவும் பட்டுப்புடவையில் மிகவும் அழகாக உள்ளார். மாலையுடன் கைக்கூப்பியபடி இந்த ஜோடி இந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது. காமெடி நடிகராக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் பிரேம்ஜி. இவர் தன்னுடைய அண்ணனின் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளராகவும் கோலிவுட்டில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆக உள்ளது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஆச்சரியத்தை வெளியிட்டு வந்தனர். சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜியையும் பிடித்து திருமண பந்தத்தில் இணைத்து விட்டதாகவும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

நாளைய தினம் திருத்தணி முருகர் கோயிலில் எளிமையாக பிரேம்ஜி மற்றும் இந்து திருமணம் நடைபெற உள்ள நிலையில் ரிசப்ஷன் நடப்பதாக மட்டுமே வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். இது எந்த தேதியில் நடக்கும் என்பது குறித்த விபரங்களை அவர் வெளியிடவில்லை. ஆனால் உடனடியாக நடக்காது என்றும் சில வாரங்கள் கழித்து இந்த விழா நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நீண்ட காலங்களுக்குப் பிறகு தங்களது வீட்டில் நடக்கும் விசேஷம் என்று வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.