குவியும் வாழ்த்துக்கள்..! உலக சாதனை படைத்த தமிழக வீரர்..!

 
1

28 வயதான மது தற்போது காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிந்து வருகிறார்.

நடப்பாண்டு பிப்ரவரி 25ஆம் தேதி காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் உலக சாதனைக்காகப் பனி மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதில் மதுவும் பங்கேற்றிருந்தார். அவர் உறைபனியில் 10 கிலோ மீட்டர் தொலைவை 28 நிமிடங்கள், 8 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இதையடுத்து போட்டி ஏற்பாட்டாளர்களால் அவருக்குப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், ‘அஃபீஷியல் வேர்ல்ட் ரெக்கார்ட்’ என்பது உள்ளிட்ட சாதனைப் புத்தகங்களில் வீரர் மதுவின் பெயர் இடம்பெற்றுள்ளது.