இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்... தி.மு.கவை வளர்த்து வருகிறோம் - சீமான் பேட்டி

 
seeman

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

3000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 51 பொறுப்பாளர்கள் உட்பட 3,000 மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மண்டல செயலாளர் - 1,  மாவட்ட செயலாளர்கள் - 8,  ஒன்றிய செயலாளர்கள் - 5, சார்பு அணி நிர்வாகிகள் - 9, தொகுதி செயலாளர்கள் - 6, 
முன்னாள் எம் பி வேட்பாளர்கள் - 3,  முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் - 6 என 51 பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "பிரபாகரன் வாழ்வதும், தமிழ் தேசியம்
 வாழ்வதும் தான் என் கோட்பாடு. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு. பெரியார் ஒழிக என்பது எனது
கோட்பாடு கிடையாது. தி.மு.க-வில் இணைவதற்கு முன்பே 3,000 பேர் என்பது எப்படி தெரியும்? இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். தி.மு.கவை வளர்த்து வருகிறோம். திராவிடர் கழகத்தில் இருந்து தி.மு.க உதயமாக காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.