சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

 
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

திருவாரூர், தஞ்சை பல்கலை.பட்டமளிப்பு விழாவில் 3ஆம் இடத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டுள்ளது.

தஞ்சையில் சாஸ்த்ரா பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல் திருவாரூர் மத்திய பல்கலையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற அரசின் உத்தரவை பல்கலைக்கழகங்கள் மீறியுள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத்துணைத்தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆளுநர் அர்லேகர் பங்கேற்ற விழாவில் 3ஆம் இடத்திற்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டுள்ளது.