ராகுல்காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

 
tt

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வான ராகுல் காந்திக்கு த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rahul

நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.  இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 
 


இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் தலைவருமான விஜய் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்தியா கூட்டணி  மூலம் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மாண்புமிகு திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.