மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி - ராமதாஸ் வாழ்த்து

 
tnt

மூன்றாவது முறையாக பிரதமராக  பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  இந்திய வரலாற்றில்,  ஜவகர்லால் நேருவுக்கு  அடுத்தபடியாக,     மூன்றாவது முறையாக  பிரதமராக பதவியேற்றுக் கொண்ட  நரேந்திர மோடி அவர்களுக்கும்,  அவருடன் பதவியேற்றுக் கொண்ட  அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.  உலக அரங்கில் இந்தியாவின்  பெருமையை நிலைநாட்டுவதிலும், பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதிலும்  புதிய  உச்சங்களை  தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.