தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது "தமிழ் மாணவர் மன்றம்" - அமைச்சர் உதயநிதி
சமூக நீதி - சமத்துவத்திற்கானக் களமாகவும், "தமிழ் மாணவர் மன்றம்" சிறக்க வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக இருந்தபோது தொடங்கிய அமைப்பு "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்".
கலைஞர் நூற்றாண்டில் இப்போது மீண்டும் பற்றத் தொடங்குகிறது அந்த நீறுபூத்த நெருப்பு.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது "தமிழ் மாணவர் மன்றம்".
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக இருந்தபோது தொடங்கிய அமைப்பு "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்".
— Udhay (@Udhaystalin) January 30, 2024
கலைஞர் நூற்றாண்டில் இப்போது மீண்டும் பற்றத் தொடங்குகிறது அந்த நீறுபூத்த நெருப்பு.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது "தமிழ் மாணவர் மன்றம்".
அதற்கான கொடி -… pic.twitter.com/qSeNaKYosY
அதற்கான கொடி - இலச்சினையை
@dmk_studentwing
நிர்வாகிகள் முன்னிலையில் இன்று அறிமுகப்படுத்தி வெளியிட்டோம்.
இளம் மனங்களில் தமிழ் மொழி, பண்பாடு, கல்வி உரிமை சார்ந்த உணர்வுகளை விதைப்பதோடு, சமூக நீதி - சமத்துவத்திற்கானக் களமாகவும், "தமிழ் மாணவர் மன்றம்" சிறக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.