சீமானின் பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாதுகாவலர் சுபாகர், பணியாளர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்தில் போலீஸார், சம்மனை ஒட்டிச் சென்றனர். இதனிடையே, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாதுகாவலர் சுபாகர், பணியாளர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் வீட்டில் காவல் துறை ஒட்டிய சம்மனை கிழித்ததாக சுபாகர், அமல்ராஜ் கைது செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட ஆணையிடப்பட்டுள்ளது.