ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்

 
பெலிக்ஸ்

ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Image

ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சவுக்குசங்கர், பெண் காவலர்களை அவதூறாக பேசி கொடுத்த நேர்காணல் விவகாரத்தில் அந்த நேர்காணலை எடுத்து ஒளிப்பரப்பு செய்த அந்த யூடியூப்  சேனலின் தலைமை செய்தி ஆசிரியர்  பெலிக்ஸ் ஜெரால்டும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

ரெட்பிக்ஸ் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 6 மாதத்திற்கு திருச்சி கணினிசார் குற்றவியல் பிரிவில் மாதத்திற்கு 2 முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.