அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!!
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், JCB இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை அக்டோபர் 21ம் தேதி போலீசார் கானத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். இதனையடுத்து, சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் அண்ணாமலை வீட்டின் முன் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். 55 அடி உயர கொடிக்கம்பம் காக்கா, குருவி அமரதான் பயன்படும்; ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள்?; சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.