“பள்ளி நேரம் தொடங்கிய பின் வரணும், பள்ளி நேரம் முடியும் முன் கிளம்பிடணும்”- விஜய்க்கு கடும் கட்டுப்பாடு
புதுச்சேரியில் நாளை காலை 10.30 மணிக்கு விஜயின் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாக புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம், “புதுச்சேரியில் நாளை காலை 10.30 மணிக்கு விஜயின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 5,000 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பாஸ் இல்லாமல் யாரும் உள்ளே வர முடியாது. விஜய் நிகழ்ச்சிக்கு குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம். விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையே அனுமதி. விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பள்ளி நேரம் தொடங்கிய பின்னர் தான் விஜய் வரவேண்டும். பள்ளி முடிவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் வருவதை தடுக்க தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளோம்” என்றார்.


