காண்டம் - திராவிடியா பசங்க : கஸ்தூரி -சர்மிளா மோதல்

 
ஷ்

காண்டம், திராவிடியா பசங்க என்று  நடிகைகள் கஸ்தூரியும் சர்மிளாவும் டுவிட்டரில் மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்பு மேடையில்  பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்,   பாஜக நடிகைகளை வைத்து கட்சியை வளர்க்க  பார்க்கிறது என்று, பாஜகவில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.

சைதை சாதிக்கின் இந்த பேச்சுக்கு நடிகை குஷ்பு கொதித்தெழுந்திருந்தார்.  உடனே கனிமொழி எம்பி சைதை சாதிக்கின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார். குஷ்பு உடனே நன்றி தெரிவித்திருந்தார்.


இந்த விவகாரத்தில் நடிகைகள் கஸ்தூரியும், திமுக ஆதரவு நடிகை டாக்டர் சர்மிளாவும் டுவிட்டரில் கருத்து மோதல் நடத்தி வருகிறார்கள்.

திமுகவைச் சேர்ந்த நடிகை டாக்டர் ஷர்மிளா,  கஸ்தூரியை டேக் செய்து,  ’’அந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.  மன்னிக்க வேண்டியது மேடம் . ஆனாலும் நீங்கள் தொடங்கி வைத்த #திராவிடியா_பசங்க என்ற ஹேஷ்டேக்கை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.   தொடங்கப்பட்ட #திராவிடியா_பசங்க என்ற ஹேஷ்டேக்கில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.  நீங்களும் அதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று மறைமுகமாக சாடியிருந்தார்.

திராவிடிய  சித்தாந்தத்தின்  பொய்களை  சுட்டிக்காட்டும் உங்களை திராவிடியான்ஸ் தொடர்ச்சியாக விபச்சாரி, வேசி, தேவடியாள் என்றெல்லாம் தாக்குகிறார்கள்,  எப்படி அமைதியாக இருக்கிறீர்கள் ? " என்று பலர் கோபமாக ஆதங்கமாக கேட்கிறார்கள்.  திராவிடியர்கள் தங்கள் தாய், சகோதரி, தலைவி போலவே என்னையும் கருதுகிறார்கள் என்பது புரிந்துவிட்டதால், அந்த  அறியாமையை அன்போடு பொறுமையாக எதிர்கொள்கிறேன். பாவம், திராவிடிய  பற்றாளர்களின்  அறியாமையை போக்குவது நம் சமூக கடமை அல்லவா? #திராவிடியா_பசங்க  என்று கஸ்தூரி முன்னர் டுவிட்டரில் பதிவிட்டதை நினைவுபடுத்தி இதை சொல்லி இருக்கிறார் சர்மிளா.

 அதற்கு ரிப்ளை செய்த கஸ்தூரி,    ’’மன்னித்தல் என்பது ஏற்றுக் கொள்வதும் ஊக்குவிப்பதும் ஆகும்.   கண்டனம் என்றால் எதிர்ப்பு என்று பொருள்.  அவர் காண்டம் என்று எழுதவில்லை அவர் உண்மையான டாக்டரா அல்லது வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா? எதுவாக இருந்தாலும் திராவிடம் என்பது வெட்கக்கேடான கருத்து என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி’’ என்று கடுமையாக சாடி இருக்கிறார்.