சிபிஐஎம் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு

 
ச்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார்.

Image


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் அகில இந்தியப் பொதுச்செயலாளராக கேரளத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய மாநாட்டில், புதிய  பொது செயலாளரை கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பிரிவில் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டார். 

எம்.ஏ. பேபி கேரளாவில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். நம்பூதிரி பாட்-க்கு பிறகு இந்த பதவிக்கு வரும் கேரளாவைச் சேர்ந்த 2- வது நபர் எம்.ஏ. பேபி ஆவார்.