எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு

 
ev velu

கரூரில் திமுக அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரியின் சோதனை நிறைவடைந்துள்ளது.

RAID TTN


கடந்த 3-ம் தேதி அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் கரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன் சகோதரி பத்மா வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரண்டு இடங்களில் வருமான வரிகள் அதிகாரிகள் சோதனை நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து காந்திபுரம் சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் அவரது வீடு இடங்களில் ஐந்து நாட்களாக சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் 5-வது நாளான இன்று வருமானவரிக்கு அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனை அலுவலகத்தில் உள்ள ஒரு சில கோப்புகள் மற்றும் கணினியில் உள்ள கோப்புகள் கைப்பற்றப்பட்டு வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த புகாரில் சோதனை நடைபெற்றது. சென்னை, கரூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.