"போதையில் வந்து வண்டியில் மோதிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்"- கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது குவியும் புகார்

 
s

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வான அருள் விக்னேஷ் மதுபோதையில் தனது வாகனத்தின் மீது மோதிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக அவரது வீட்டின் அருகிலுள்ள ஹோட்டல் பணியாளர் சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஹோட்டல் பணியாளர் சுரேஷ் கூறுகையில், "கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மது போதையில் வந்து எனது வாகனத்தின் மீது மோதிவிட்டார். வாகனம் சேதமடைந்தது குறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அப்படித்தான் செய்வேன் என்றும் மிரட்டினார். 
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அவர் எந்தப் புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை" என்றார். 


கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டின் அருகே உள்ள ஹோட்டல் பணியாளரான சுரேஷ் என்பவர், சட்டமன்ற உறுப்பினரின் வீட்டின் அருகே இந்தப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துப் பேட்டி அளித்தபோது, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, காவல்துறையினர் மூலம் அவர் பணிபுரியும் இடத்திலிருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.