சென்னையில் குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றுதல் குறித்த பாதிப்புகளுக்கு புகார் அளிக்கலாம்

 
Chennai

சென்னையில் மழை காரணமாக ஏற்படும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா எண் 1916 & 044-45674567 மூலம் புகார் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணியை மேற்கொண்டால் நடவடிக்கை: சென்னை  குடிநீர் வாரியம் எச்சரிக்கை | ction will be taken if sewage disposal works  are carried out ...

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கும். பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 044-45674567 (20 இணைப்புகள்) கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவு அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும். 15 மண்டலங்களுட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.