‘ஒரே நாற்றமாக இருக்கிறது’- மாதவிடாய் மாணவியை வெளியே நிற்க வைத்ததாக புகார்

 
s

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவியை (11 வயது) மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவியை (11 வயது) மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு துர்நாற்றம் வீசுவதாக கூறி வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு ஆசிரியர் உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பள்ளி முடியும் வரை வெளியே நின்று வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி அழுததாகவும் தகவல்க தெரிவிக்கின்றன. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே நிற்க வைத்து கொடுமை படுத்தியுள்ளார் ஆசிரியர். நீண்டநேரம் நின்று கொண்டே இருந்ததால் மாணவியின் காலில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில டதலைவர் நயினார் நாகேந்திரன், “சென்னையில் மாதவிடாயின் போது துர்நாற்றம் வீசுவதாகக் காரணங்காட்டி, 11 வயது அரசுப் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியேயே பள்ளி முடியும் வரை நிற்க வைத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதியில்லாமையாலும் தண்ணீர் வசதி இல்லாமையாலும் பல பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்குச் செல்வதற்கே தயங்கும் வேளையில், இப்படி ஒரு பிற்போக்கான சம்பவம் மாநிலத் தலைநகரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே நடந்திருப்பது, தமிழகப் பெண்கள் முன்னேற்றத்தில் விழுந்த பெரும் கீறல்.இவ்விஷயத்தை முதல்வர் அவர்கள் உடனடியாகக் கருத்தில் கொண்டு, புகாரை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்து, இது போன்ற குறுகிய மனப்பான்மை மேலும் வளரவிடாமல் தடுக்க வேண்டும்! அத்தோடு நில்லாது, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளர்