வெளிநாட்டில் பாலியல் தொழில்- டிக்டாக் ரவுடி பேபி சூர்யா மீது புகார்

 
சூர்யா

பல பெண்களை வெளி நாட்டில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும்,  டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

எச்சகள தே*டியா பயலுகளே - Rowdy Baby Surya Angry TikTok Videos Tamil  Dubsmash அட்டுழியங்கள் 2019 - YouTube

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரினை அளித்தனர்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தனம், “தனது பிள்ளைகள் ஆன்லைனில் வகுப்பு படித்து வந்த போது, சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. இதனால் இது பற்றி ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்ட போது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமின்றி தனது நம்பரை சமூக வலைதளங்களில் விபச்சாரி எனக்கூறி பதிவு செய்தார்.  மேலும் ரவுடி பேபி சூர்யா கஷ்டத்தில் சிக்கியுள்ள பெண்களை குறிவைத்து அதிக பணம் தருவதாக கட்டாயப்படுத்தி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வருகிறார். 

காவல்துறை, முதல்வர் என யாரிடம் சென்றாலும் ஒன்றும் செய்யமுடியாது என ரவுடி பேபி சூர்யா மிரட்டுகிறார். பல அமைச்சர்களின் பின்புலம் அவருக்கு இருக்கிறது. இது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவல் ஆணையர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. ரவுடி பேபி சூர்யா குறித்தான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருக்கிறது. உடனடியாக ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.