"இருவரும் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டோம்"- அதிரவைத்த ரேபிடோ டிரைவர் வாக்குமூலம்

 
ச் ச்

சென்னை மதுரவாயிலில் வசித்துவரும் திரிபுராவை சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ரேபிடோ டிரைவர் மீது புகார் எழுந்த நிலையில், இருவரும் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டோம் என குற்றம்சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஷகீல்  (Tasu Akathar) டசு அகதார் தம்பதியினர். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மதுரவாயில் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர், இந்நிலையில் டசு அகதார் (21) பள்ளிக்கரணையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்ல ரப்பிடொ புக் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த சிவகுமார்(22) தனது இருசக்கர வாகனத்தில் டசு அகதாரை ஏற்றுக்கொண்டு பள்ளிக்கரணை சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு டசு அகதார் சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் மதுரவாயில் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதனால் காத்திருந்து சிவகுமார் மீண்டும் மதுரவாயிலுக்கு அழைத்து வந்துள்ளார். மதுரவாயலுக்கு வந்து கொண்டிருந்தபோது போரூர் சுங்க சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி டசு அகதார் இடம் பாலியல் சீண்டரில் ஈடுபட்டுள்ளார். 

உடனடியாக டசு அகதார் தன்னிடம் ரப்பிடொ டிரைவர் தவறாக நடந்து கொள்வதாக அவருடைய கணவருக்கு whatsapp மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். உடனடியாக அவருடைய கணவர் அந்த நபரை நைசாக பேசு எம்எம்டிஏ காலனி அழைத்து வருமாறு கூறியுள்ளார். அதனால் டசு அகதார் சிவகுமாரை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு காத்திருந்த டசு அகதார் உடைய கணவர் மற்றும் அண்ணன் உறவினர்கள் சிவகுமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் சிவகுமாரை ஒப்படைத்துள்ளனர். பின்பு சம்பவம் தொடர்பாக வானகரம் போலீசார் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.