"போஸ்ட் ஆபீஸ் சேவையில் புகாரா?" – தமிழ்நாட்டு மக்களுக்கு வெளியான மெகா வாய்ப்பு! அக். 28-க்குள் இதைச் செய்யுங்க!
Oct 8, 2026, 09:15 IST1791431136000
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள11,745 தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்கலாம். இதன்மூலம், அஞ்சல் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துக்களை அனுப்பலாம்.
தங்களது குறைகளை ‘அஞ்சல் குறைதீர்க்கும் முகாம்’ என்ற தலைப்புடன் திருமதி சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002, என்ற முகவரிக்கு 2026 அக்டோபர் 28-ம் தேதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை ’அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்' என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

