அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்..!!
அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அவரது தந்தை மீது அவரது சொந்த ஊரான நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
திமுக பேரம் பேசியதாகக் குற்றம் சாட்டி வரும் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது. அவரது சொந்த ஊரான நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர், அமைச்சர் மற்றும் அவரது தந்தை மீது இப்புகாரை அளித்துள்ளார். நிர்மல்குமார் முன்பு பாஜக, அதிமுகவில் இருந்தபோது முறைகேடாக நிலங்களை ஆக்கிரமித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்பு பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்தபோது, அவரது சொந்த ஊரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுப் பலரது நிலங்களை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகத் தமிழக அரசியலில் தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் ரூ. 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியிலேயே தற்போது அவர் மீது இந்த நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது.


