தேசியக் கொடியை அவமதித்தாரா உதயநிதி ஸ்டாலின்?

 
 தேசியக் கொடியை அவமதித்தாரா உதயநிதி ஸ்டாலின்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடியை அவமதித்தாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

Image


76வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். முதல்வர் மரியாதை செலுத்தினார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில்  நடைபெற்ற குடியரசு தின விழாவில் மிடுக்குடன் நடைபெற்ற அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு நாள் விழா மேடையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் அருகில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார். அவர் தேசிய கொடியை  சட்டையின் இடதுபுறத்தில் அணியாமல் வலது பக்கம் அணிந்து அவமதித்ததாக தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா,  “தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்திய தேசிய கொடியை 🇮🇳 சட்டையின் இடதுபுறத்தில் அணியாமல் வலது பக்கம் அணிந்து அவமதித்துள்ளார். பாரத திருநாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதையே வாடிக்கையாக கொண்டு தி.மு.க-வினர் செயல்படுகின்றனர். வெட்கப்படுங்கள் #உதயநிதி !” எனக் குறிப்பிட்டுள்ளார்.