"சவுக்கு சங்கர் 10 லட்சம் கேட்டு மிரட்டினார்... ரூ.1 லட்சம் கொடுத்ததற்கு உயிர்நாடியில் எட்டி உதைத்தார்”- பெண் கதறல்
சவுக்கு சங்கர் கைது குறித்து சினிமா தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் Red & Follow திரைப்படத்தின் தயாரிப்பாளர், நான் கொடுத்த புகாரின் பேரில் நேற்று சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் அவர் பதிவிட்ட என் படம் சம்மந்தமான விஷயங்களை நீக்க கோரிய போது ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி அலுவலகத்திற்கு வரச்சொன்னார். நான் அவரது அலுவலகத்திற்கு சென்ற போது மீண்டும் என்னுடைய படத்தை பற்றி தரக்குறைவாக பேசாமல் இருக்க எனக்கு ரூபாய் 10 லட்சம் கொடு, இல்லையென்றால் உன்னுடைய படம் வெளிவராமல் இருக்க நான் வீடியோ வெளியிடுவேன் என்று என்னை பயமுறுத்தினார்.
சவுக்கு சங்கர் கைது குறித்து சினிமா தயாரிப்பாளர் மகேஷ் ரம்யா அறிக்கை#SavukkuShankarArrest #TNPolice pic.twitter.com/g0SV02FFZv
— SDC World (@sdcworldoffl) December 15, 2025
நான் அதன்பிறகு என்னுடைய கையில் ரூ.1 லட்சம் தான் உள்ளது என்று கூறினேன். அதற்கு நான் என்ன பிச்சைக்காரனா என்று கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு கீழே தள்ளி உயிர்நாடியில் எட்டி உதைத்தார். அவர் மட்டுமில்லாமல் அவரது டீமில் உள்ள மாலதியும், அடையாளம் காட்டக்கூடிய நான்கு நபர்களும் என்னையும், என்னுடைய படத்தின் இயக்குநரையும் அடித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்” எனக் கூறியுள்ளார்.


