இப்தார் நிகழ்ச்சி! விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார்!

 
vijay

இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 07ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது மேலும் முக்கிய மசூதிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு நோன்பு கஞ்சி மற்றும் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இந்த விழாவில் விஜயுடன் தமிழ்நாடு துணை தலைமை ஹாஜி, இமாம் முகமது மன்சூர் காசிப், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னத் ஜமாஅத் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.