குடிபோதையில் மெட்ரோ ஊழியரை தாக்கிய பாடகர் வேல்முருகன்

 
வேல்முருகன் பாடகர்

சி.எம்.ஆர்.எல் மெட்ரோ ஊழியரை திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது.


மதுபோதையில் வந்த வேல்முருகன், ஆற்காடு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மெட்ரோ ஊழியரை தாக்கியதாகவும், ஊழியர்களை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.