“தாராபுரம் ரோடு ஷோவுக்கு ரூ.2.27 கோடி, மதுராந்தகத்தில் ரூ.1.05 கோடி”- தவெக வேட்பாளர்கள் மீது புகார்
இடைத்தேர்தலில் செலவின வரம்பை மீறியுள்ளதாக தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அமலன் புகார் மனு அளித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், வரும், 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. 9ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில் இடைத்தேர்தலில் செலவின வரம்பை மீறியுள்ளதாக தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அமலன் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைகளைவிட பல கோடி ரூபாய் அதிகமாக செலவு செய்துள்ளனர். ரோட் ஷோ, பேரிகார்டு அமைத்தல், வெளியூர்களில் இருந்து ஆட்கள் வரவழைப்பு, பெரிய கொடி கம்பம் நட்டுள்ளனர். இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தலா ரூ.40 லட்சம் மட்டுமே செலவிட அனுமதி உள்ள நிலையில் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தாராபுரத்தில் முதல்வரின் ரோடு ஷோவுக்கு பேரி கார்டுகள் அமைக்க ரூ.2.27 கோடி செலவிட்டுள்ளனர் என்றும், மதுராந்தகம் ரோடு ஷோவில் பேரி கார்டுகள் அமைக்க ரூ.1.05 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

