சவுக்கு சங்கர் மீது 17 பேர் மகளிர் ஆணையத்தில் புகார்

 
சவுக்கு

கடந்த 5 நாளில் பெண் காவலர்கள் 16 பேரும், ஒரு சமூக ஆர்வலர் என மொத்தம் 17 பேர் மகளிர் ஆணையத்தில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

tn

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார், சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேலும்  ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.  இதனிடையே சவுக்கு சங்கரை சிறையில் அடைத்ததுடன் கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிந்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கடந்த 5 நாளில் பெண் காவலர்கள் 16 பேரும், ஒரு சமூக ஆர்வலர் என மொத்தம் 17 பேர் மகளிர் ஆணையத்தில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புகார்கள் குவிந்துவருகின்றன. அதேசமயம் ஆளும் அரசு மீதும், ஆட்சியாளர்கள் மீதும் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் விமர்சனங்களை முன்வைத்த  நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.