“அண்ணி த்ரிஷாவுக்காக சண்டை போடுறாங்க”- மேடையில் அவதூறு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்
அ.தி.மு.க கூட்டத்தில் திரிஷா பெயரை குறிப்பிட்டு முதலமைச்சரை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க கூட்டத்தில் திரிஷா பெயரை குறிப்பிட்டு முதலமைச்சரை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக காவல் கண்காணிப்பாளரிடம் தவெகவினர் புகார் மனு அளித்துள்ளனர். முதலமைச்சர் பற்றி அவதூறு கருத்துகளை சமூக ஊடகம் மற்றும் பொதுவெளியில் ஆர்.பி.உதயகுமார் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தேனியில் பேசிய் ஆர்.பி. உதயகுமார், “முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி என்ன தெரியும்? மேகதாது பிரச்சினை பற்றி என்ன தெரியும்? காவிரி நீர்த் திட்டத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? இந்தப் பிரச்சினைக்காகப் போராடாமல், வேறு ஏதோ பிரச்சினைக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியி்னர் சண்டையிடுகின்றனர். காவிரிக்காக இருதரப்பும் சண்டையிடுவார்கள் என பார்த்தால் த்ரிஷா அண்ணிக்காக சண்டை போடுகிறார்கள்” என்றார்.

