சவுக்கு சங்கரை போட்டோ எடுத்த பெண் போலீஸ்! கால் மீது கால் போட்டு அராஜகம்

 
photo

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார், சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேலும்  ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

tn

இதனிடையே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, சவுக்கு சங்கர் தற்போது திருச்சி அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டியுள்ளார். போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் கூறிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்போது அவரை பெண் போலீஸ் ஒருவர் புகைப்படம் எடுக்கிறார். சவுக்கு சங்கரின் இடது பக்கம் அமர்ந்திருக்கும் பெண் காவலர் கால் மீது கால் போட்டு போட்டுக்கொண்டு, கால் சவுக்கு சங்கர் மீது பட்டிருக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட நபரை வாகனத்தில் அழைத்து செல்லும் பொழுது அவரை புகைப்படம் எடுக்க பெண் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்தது யார் ? எதற்காக அப்படிப்பட்ட ஒரு புகைப்படம் அல்லது காணொளி எடுக்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது.