“அரவக்குறிச்சி தொகுதியை விட்டுக்கொடுக்க ஜோதிமணி ரூ.1.5 கோடி பெற்றார்”- காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி

 
jothimani

2014 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியை விட்டுக் கொடுக்க ஜோதிமணி 1.5 கோடி ரூபாய் பணம் பெற்றதாக காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் மீது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியம் பேட்டி அளித்தார். கடந்த சில ஆண்டுகளில் ஜோதிமணியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து 115 முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். 2014 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியை விட்டுக்கொடுக்க ஜோதிமணி 1.5 கோடி ரூபாய் பணம் பெற்றதாக கடுமையான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

செய்யாத பணிகளைச் செய்ததாக ராகுல் காந்தியிடம் பொய் தகவல்களைக் கூறி ஜோதிமணி ஏமாற்றி வருவதாகவும், தொகுதி முழுவதும் 10 லட்சம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்ததாகக் கூறியது அப்பட்டமான பொய் என்றும் அவர் சாடியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்தும், ஜோதிமணியின் ஒருதலை பட்சமான வேட்பாளர் தேர்வால் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் பல இடங்களில் தோல்வியைத் தழுவியது. கட்சியை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஜோதிமணி மீது மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.