கானா பாடகி இசைவாணி மீது இந்து மக்கள் கட்சியினர் புகார்

 
பிபிசியில் 100 பெண்கள் பட்டியலில் சென்னை பெண் இசைவாணி! – யார் இவர்?

கானா பாடகி இசைவாணி பாடிய ஐயப்ப சுவாமி பாடல் இந்து மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ள நிலையில் இந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசியில் 100 பெண்கள் பட்டியலில் சென்னை பெண் இசைவாணி! – யார் இவர்?

இந்நிலையில் இப்பாடலை பாடிய கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநில மகளிரணி தலைவி சுசிலாதேவி தலைமையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மீது புகார் மனு அளிக்கப்பட்டது‌. அந்த புகாரில், “இந்தியாவில் பல கோடி மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி குறித்தும், மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த பாடல் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் கலாச்சார மையம் நடத்திய நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி பாடியுள்ளார்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனங்களை புண்படுத்தும் வகையில் மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரத்தையும் உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.