ஜிபி முத்துவை கைது செய்யக்கோரி பொதுமக்கள் புகார்

 
s

தூத்துக்குடி உடன்குடியில் பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் குறித்து ஆபாசமான வார்த்தைகளால் instagram facebook youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பு வகையில் வீடியோ வெளியிட்டு வரும் யூடியூப்பர் ஜிபி முத்து மீது காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

gp muthu

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசித்து வரும் நடிகரும் youtube பருமான ஜி பி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியை சேர்ந்த முத்து மகேஷ் என்பவர் உடன் தகராறில் ஈடுபட்டதுடன் முத்து மகேஷ் மனைவி பால அமுதாவை தாக்கி தகராறு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாலா அமுதா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இந்த சம்பவம் தொடர்பாக பாலஅமுதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் நடிகர் ஜி பி முத்து அவரது மனைவி அஜிதா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனிதா கணேசன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் ஜி பி முத்து அந்தப் பகுதியை சேர்ந்த பெண்களையும், பால அமுதாவையும் ஆபாசமாக சித்தரித்து அவதூறு பரப்பும் வகையில் instagram, facebook, youtube-ல் தற்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும் ஜி பி முத்து தன்னை காவல்துறையினர் கைது செய்ய மாட்டார்கள் காவல் துறையினர் எனக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் எனது சட்டை பையில் உள்ளனர், நான் யூடியூபில் போடுவதைதான் பொதுமக்கள் நம்புவார்கள் என என்பது போன்றும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட முத்து மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகம் வந்து பெண்களை அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் ஊரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் நடிகர் ஜி பி முத்து மற்றும் அவரது உறவினர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்