எடப்பாடி பழனிசாமி மீது ஏர்போட்டில் கோஷமிட்ட இளைஞர் புகார்!

 
எடப்பாடி பழனிசாமி மீது ஏர்போட்டில் கோஷமிட்ட இளைஞர் புகார்!

எடப்பாடி பழனிச்சாமி, பாதுகாவலர் கிருஷ்ணன் மற்றும் 5 பேர் உள்பட 7 பேர் மீது மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Image

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பில் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கிய எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து பஸ் மூலம் விமான நிலைய வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டார். அப்போது விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம் வையாபுரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஷ்வரன் (வயது 42) முன்னாள் அதிமுக பிரமுகர் எடப்பாடி பழனிசாமி நோக்கி துரோகி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர், தென்மாவட்ட  மக்களுக்கு 10.5 சத இட ஒதுக்கீடு திட்டத்தின் மூலம் துரோகம் செய்தவர் என கூறினார். 

இதனை தொடர்ந்து எடப்பாடி பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ராஜேஸ்வரன் அவனியாபுரம் காவல் நிலைய போலீஸ் இடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின் விசாரணைக்கு பின் அவர் சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

eப்

இந்நிலையில் ராஜேஸ்வரன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது பாதுகாவலர் கிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத ஐவர் உட்பட ஏழு பேர் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரிப்பதாக உறுதி அளித்ததன் பேரில் ராஜேஸ்வரன் அங்கிருந்து சிவகங்கை புறப்பட்டு சென்றார். ராஜேஸ்வரனுக்கு துணையாக அமமுக அம்மா பேரவை மாநில  செயலாளர் டேவிட் அண்ணாத்துரை மற்றும்  அமமுக நிர்வாகிகள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.