தொடர்ந்து விதிகளை மீறும் ஆதவ்! குழந்தைகளை நடனமாட வைத்து பிரச்சாரம்
Updated: Apr 19, 2026, 11:10 IST1776577222543
தேர்தல் நடத்தை விதிமுறைகளை தவெக வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து மீறுவதாக புகார் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு இரு தினங்களே உள்ள நிலையில், திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தவெக வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மீறுவதாக புகார் எழுந்துள்ளது. அயனாவரத்தில் ஆதவ் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குழந்தைகளை பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டதாக ஆதவ் மீது புகார் எழுந்த நிலையில் அதே சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.


