"கொடுக்கல், வாங்கலில் பிரச்சனை" - நடிகை ராதா மீது புகார்

 
tn

தமிழில் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் தாயாருடன் வசித்து வந்த இவர் சப் இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டார். வசந்த ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவர் மீது நடிகை ராதா போலீசில் புகார்!

இந்த சூழலில் வசந்த ராஜா தன்னை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக விருகம்பாக்கம் போலீசில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார் நடிகை ராதா. ஆனால் ராதா தன்னை வற்புறுத்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் ,அவருக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் உள்ளதாகவும், அதை தட்டிக் கேட்டதால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் வசந்த ராஜா தெரிவித்தார். இதை தொடர்ந்து கணவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ராதா கூறி வழக்கை வாபஸ் வாங்கினார்.

கணவர் மீது நடிகை ராதா போலீசில் புகார்!

இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முரளி என்பவரை தாக்கியதாக சென்னை, வடபழனி காவல் நிலையத்தில் நடிகை ராதா மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தலையில் படுகாயமடைந்த முரளி, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த மார்ச் மாதம், பிரான்சிஸ் என்பவரை தாக்கியதாக நடிகை ராதா, அவரது மகன் மீடு புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.