குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மலம் - விழுப்புரத்தில் பரபரப்பு!!

 
tn

விழுப்புரம் மாவட்டம் கே.ஆர்.பாளையம்  கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

police

கிணற்று தண்ணீரை மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றி, குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில் மலம் கலக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தும் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வேங்கைவயல் வழக்கு- 4 சிறார்களுக்கு ஆக.21ம் தேதி டிஎன்ஏ மாதிரி பரிசோதனை
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்காக பயன்படுத்திய நீர் தேக்க தொட்டியில் சிலர் மலம் கலந்த விவகாரம் தமிழ்நாட்டை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வகையில் வேங்கைவயல் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மற்றொரு சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.