மதிமுக தனிச் சின்னத்தில் போட்டி - வைகோ அறிவிப்பு
Mar 8, 2024, 12:59 IST1709882957342
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி,தனிச் சின்னத்தில் போட்டி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிகிறது.
ஆனால் திமுக தரப்பிலோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் உடன்படிக்கை முடிவுக்கு வராமல் இருந்து வந்தது. தற்போது மதிமுக தனிசின்னத்தில் போட்டி என்பதை திமுக தலைமை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மாநிலங்களவை பதவி நிறைவடைய இன்னும் 15 மாதங்கள் உள்ளன. அதனால், அதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.