BREAKING நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு - துரைமுருகன் அறிவிப்பு!

 
arivalayam

நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழுவினை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

stalin

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழு அமைத்தது திமுக.  தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும்; தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தல் - 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

தலைமை: திருமிகு. கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்) திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்)

திரு. ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்)

மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்)

மாண்புமிகு டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்)

மாண்புமிகு கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்)

திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திரு. சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்)

திரு. எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்)

மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்)

மாண்புமிகு மேயர் பிரியா