புதுசு புதுசா கிளம்புறாங்க..! இ-பான் கார்டு பதிவிறக்கம் பெயரில் மோசடி கும்பல்..!

 
1 1

இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு வரும் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் உங்களின் PIN, கடவுச்சொற்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட ரகசியத் தகவல்களைக் கோராது.

இந்த மோசடி மின்னஞ்சல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று, உங்களின் நிதித் தகவல்களைத் திருடும் Phishing மோசடியின் ஒரு பகுதியாகும்.

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.

எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும்.

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in ஆகிய முகவரிகளுக்கு அனுப்பிவிட்டு, உடனடியாக அந்த மின்னஞ்சலை நீக்கிவிடுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.