"நல்ல பண்புகளை கற்று வாருங்கள் அண்ணாமலை" - செல்லூர் ராஜூ அட்வைஸ்

 
tt

லண்டனில் இருந்து வரும் போது நல்ல பண்புகளை கற்று வாருங்கள் அண்ணாமலை என்று செல்லூர் ராஜு அறிவுறுத்தியுள்ளார். 

sellur raju

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்கப்படவில்லை. திமுக ஆட்சியில் தான் விற்கப்படுகிறது.  கள்ளச்சாராய விற்பனைக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.  வெறும் மைதானத்தில் கம்பு சுழற்றுவது போல பேரவையில் எங்களை வெளியேற்றி முதல்வர் விளக்கம் கொடுக்கிறார் என்றார்.

Annamalai

 தொடர்ந்து பேசிய அவரிடம் அண்ணாமலை லண்டனுக்கு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதில் அளித்த அவர் , படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அண்ணாமலை,  நல்ல பண்புகளை கற்று வரவேண்டும்.  தலைவர்களை பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை கற்று வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.