மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி வருகிறது பூஸ்டர் தடுப்பூசி - இதை செய்தால் மட்டும் போதுமாம்!!

 
ttn

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரப் பணியாளர்கள்,  முன் களப்பணியாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட இணை  நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். 

stalin

இந்நிலையில் சென்னையில் 1913 எண்ணில் பதிவு செய்தால் மூத்த குடிமக்களுக்கு வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணைநோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044 - 2538 4520 மற்றும் 044 - 4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். 

tn

60 வயதைக் கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்தவர்களும் இந்த எண்களில் தொடர்புக் கொண்டு பதிவு செய்தால், அவர்களுக்கும் இல்லங்களிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.