பாலியல் குற்றவாளிகளுக்கு கலர் கோடு! புதிய திட்டத்தை களமிறக்கிய தவெக அரசு

 
Kolkata doctor case Calcutta High Court orders transfer of Kolkata doctor rape and murder case to CBI

சரித்திரப் பதிவேடு பராமரித்து வருவது போன்று பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க 'கலர் கோடு' என்ற புதிய திட்டம் 'SPECTRUM' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


சரித்திரப் பதிவேடு பராமரித்து வருவது போன்று பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்க 'கலர் கோடு' என்ற புதிய திட்டம் 'SPECTRUM' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களை உள்ளடக்கி இந்த திட்டத்தை செயல்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஈவ் டீசிங் முதல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வரை பல்வேறு வழக்குகளில் சிக்கிய சுமார் 15,000 குற்றவாளிகளின் விவரம் தயாரித்து முழுமையாக மேப் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, தொடர் போக்சோ குற்றவாளிகளுக்கு சிவப்பு குறியீடு வழங்கப்படவுள்ளது. பெண்களைத் தொடர்ச்சியாக துன்புறுத்துவோருக்கு ஆரஞ்சு குறியீடும், சைபர் மற்றும் ஆன்லைன் குற்றவாளிகளுக்கு நீல நிற குறியீடும் வழங்கப்படும் என
காவல்துறை கூறியுள்ளது.