புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறப்பு!

 
college college

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

rain

தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை. செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலின் தாக்கத்தினால் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி , கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

college reopen

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.  கனமழை காரணமாக சென்னை , திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வருகின்ற 11ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.