ஆளுநரை வரவேற்க வராத கல்லூரி மாணவர்கள், தேர்வு எழுத முடியாது! மிரட்டும் முதல்வர்

 
rn ravi

நாகை மாவட்டத்திற்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க பாஜக மாவட்டத் தலைவரின் தனியார்நர்சிங் கல்லூரி மாணவிகளை கல்லூரி முதல்வர் மிரட்டி வரசொல்லும் ஆடியோ வைரலாகிவருகிறது.

file

தமிழ் சேவா சங்கம் சார்பில் இன்று நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைப்பெறும் நிகழ்ச்சிகளில் தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் பாஜக நாகை மாவட்ட தலைவர்கார்த்திகேயன் கல்வி நிறுவனமான கார்த்திகேயன் நர்சிங் கல்லூரி மாணவர்களை ஆளூநர்  ஆர்.என்.ரவியை வரவேற்க காலை 6 மணிக்கே வரவேண்டும் என கல்லூரி முதல்வர் இளவேந்தன் மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் மாணவர்களை அழைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாகனம் தயார் செய்வதாகவும், வரவில்லை என்றால் லைப்லாங் மீளமுடியாத அளவிற்கு செய்து விடுவேன், தேர்வு எழுத முடியாது எனவும் அந்த ஆடியோவில் எச்சரிக்கை விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.